போலி வாக்குறுதி மூலம் சீனாவுக்கு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மத்திய அரசு

டில்லி:

சீனாவில் நல்ல ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புஎன கூறி ஏமாற்றி இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலை மத்திய உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஜி அஹிர் லோக்சபாவில் அளித்தார்.

அதில், ‘‘ நல்ல ஊதியம் மற்றும் வேலைகள் என்ற வாக்குறுதி அளித்து இந்தியர்கள் பலர் சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது அதிகரித்து வருவதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.
அவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, கைவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு கைவிடப்பட்டவர்கள் இந்தியாவுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அஹிர் வழங்கிய ஆவணங்களில், ‘‘சீனாவில் ஆள்கடத்தல் வழக்குகள் 33 பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இது 23 ஆக இருந்தது. ஏஜென்ட்கள் இந்திய தொழிலாளர்களை போலி விசா மூலம் ஈராக்கிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையிலும், ஏமாறுவதை தடுக்கவும் மாநிலங்களில் 2016ம் ஆண்டு மே மாதம் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.