சென்னை:

மிழகத்தில் வரும் 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், தற்போதைய ஃபானி புயல் காரணமாக மேலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ள நிலை யில், ஜூன் மாதம் பள்ளி திறக்கப்படும் தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  முதல்வருடன் கலந்து பேசி  முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

வங்கக்கடலில் உருவான  ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி சென்றுள்ள நிலையில், தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இருந்தாலும் சில இடங்களில் வெப்பம்  அதிகரித்து காணப்பட்டது. வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் 43 முதல் 44 C வரை வெப்பமும், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களி லும் 40 C வெப்ப நிலையும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், கோடை விடுமுறையை மேலும் நீடிக்க வேண்டும் என்றும், பள்ளிகள்  ஜூன் 3ந்தேதி திறக்கப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக பள்ளி திறக்கும் தேதி மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.