டில்லி

இந்த வருட பருவ மழை 102% அதிகமாக இருக்கலாம் எனப் புவி அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடெங்கும் பருவமழை இந்த மாதம் தொடங்க உள்ளது.

இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் இந்த வருடம் பருவ மழை சாதாரண அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அல்லது நீண்டகால சராசரியில் 100% வரை மட்டுமே இருக்கலாம் எனத் தெரிவித்து இருந்தது.

ஆனால் இன்று புவி அறிவியல் அமைச்சக செயலர் மாதவன் ராஜிவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர், “இந்த வருட பருவ மழை நீண்டகால சராசரியில் இருந்து 102% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.