நீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர்:

ர்நாடகாவில் இருந்த மேட்டூர்  அணைக்கு வரும்  நீர்வரத்து மீண்டும்  அதிகரித்துள்ள நிலையில் நிரம்பி உள்ள மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப் படுகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்கிருந்து வந்துகொண்டிருந்த தண் ணீரின் அளவு அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து  வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

முழு கொள்ளளவை எட்டி…. கடல்போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

இதன் காரணமாக முக்கொம்பு அணையிலும் விறுவிறுவென தண்ணீர் பெருகியது. அதையடுத்து,  முக்கொம்பு மேலணையில் இருந்து  கொள்ளிடத்தில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஐந்தாண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு குறைந்ததால், மேட்டூரில் இருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 67ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த தண்ணீரின் அளவு தற்போது   விநாடிக்கு 64 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக ஒகனேக்கல் அருவிகளில் குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதேவேளையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 68 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 93.95 டிஎம்சி ஆகவும் உள்ளது.

இதன் காரணமாக தற்போது மேட்டூர் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.