நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம்:

தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளது. தோஷ பரிகார நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கோடை விடுமுறை எதிரொலியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து சுற்றுலா வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தோஷ பரிகார நிவர்த்தி பூஜை செய்து, கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களின் சிலைகளை சுற்றி வந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

இப்பகுதியில் பக்தர்கள் வருகையும், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளதால் இப்பகுதி வர்த்தகர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் வருகை குறைந்து விடுகிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நவபாஷாண கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.