அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 5 பேர் பலி

கோவை

கோவை மற்றும் திருப்பூர் மற்றும் நெல்லையில் பன்றி காயச்ச்ல் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக மேலும் 5 பேர் பலி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில்  பன்றி, டெங்கு காய்ச்சல்கள் வெகு வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று வரை பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை  15 ஆகவும்,, டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருப்பதாக  தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து  இருந்தார். இந்த நிலையில் இன்று மேலும் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா என்ற 63 வயது முதிய பெண்மணி பன்றி காய்ச்சல் காரணமாக  கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

அதுபோல  திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டரும் பன்றி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் என்ற சிறுவனும், டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னரசம்பாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் சன்சியா(4). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சன்சியா கோவை அரசு மருத்துவமனையில் 28ம் தேதி சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த சன்சியா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தாள்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (55) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிர்பலி அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.