டில்லி:

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருவது உள்பட  பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்து வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில்,  எங்களின் முடிவு நாட்டின் மாற்றத்திற்கான அடிப்படை  என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடும் நிதிஆயோக் ( “NITI Aayog”) அமைப்பு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க வலியுறுத்தி வருகிறது. அபோது நஷ்டத்தில் இயங்கும்  42 பொதுத்துறை நிறுவனங்களையும் இழுத்துமூட மத்தியஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக, மோடி அரசும், பெல் உருக்காலை, பிஎஸ்என்எல், சேலம் உருக்காலை,  கோல் இந்தியா போன்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுவாக, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு 51 சதவிகிதம், 49 தனியாரின் பங்கும் இருக்கும். ஆனால் இவற்றினை அரசு குறைக்கும் போது, இந்த நிறுவனங்கள் ” பொதுத்துறை நிறுவனங்கள்” என்ற பதவியை இழந்து விடும் அபாயம் ஏற்படும்.

பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நவரத்னா, மஹாரத்னா, மினிரத்னா என பிரிக்கப்பட்டுள்ளன.

நவரத்னா பிரிவில் நிகர சொத்து, நிகர மதிப்பும், நிகர வருமானம், உற்பத்தி செலவு உள்ளிட்ட ஆறு பிரிவுகள் மூலம் இந்த நிறுவனங்கள் பிரிக்கப்படுகின்றன. இதில் 100க்கு 60 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிறுவனங்கள் நவரத்னா நிறுவனங்கள் என்று அழைக்கப்படும். இந்த பிரிவில் 17 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

குறிப்பாக ஹிந்துஸ்தான் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நெய்வேலி லிக்னைட், பாரத் பெட் ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவை சேரும் நிறுவனங்களாகும்.

மஹாரத்னா திட்டத்தில், மூன்று வருடத்துக்கும் மேல் 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் பண பரிவர்த்தனை செய்திருந்தால், அத்தகைய நிறுவனங்கள் மஹா நவரத்னா நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படும். அதோடு மூன்று வருடத்திற்கும் மேலாக வரி நீங்கலாக லாபம் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்க வேண்டும் என்றும், இந்த நிறுவனங்கள் பங்கு சந்தை பட்டியியலில் இருக்க வேண்டும் எனவும், ஆக மொத்தம் இந்த பிரிவில் இதுவரை 7 நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. மற்றவை மினி ரத்னா என்று அழைக்கப்படுகிறது.

பெரும் பொதுத்துறை நிறுவனங்கள்” ஒ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, கெயில், என்.டி.பி.சி, போன்ற பொதுத் துறை நிறுவனங் களின், 51 சதவிகித பங்கிலிருந்து மேலும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம், இந்த நிறுவனங்கள் “பொதுத்துறை நிறுவனங்கள்” என்ற பதவியை இழக்க கூடும். அதோடு அந்த நிறுவனங்கள் தனியாரின் ஆதிக்கத்திற்கு சென்று, தனியார் நிறுவனங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், மத்தியஅரசோ, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி, அதை தனியாரின் நிர்வாகத்திற்கு கொடுக்கவே விரும்புகிறது.

இதுமட்டுமின்றி நாட்டின பல்வேறு பிரச்சினைகளில் மோடி அரசு மக்கள் விரோத செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. பணமதிப்பிழப்பில் தொடங்கி, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஜிஎஸ்டி, புதிய கல்விக்கொள்கை, இந்தி திணிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஆர்சி விவகாரம் போன்ற பல செயல்களில் பாஜக அரசு மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது.

ஆனால், நாங்கள் மக்களுக்கு நல்லதே செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். இதுகுறித்து கூறியுள்ள அமித்ஷா,  மக்கள் எதை விரும்புவார்கள் என்று நினைத்து நாங்கள் ஒருபோதும் முடிவுகளை எடுக்க வில்லை, ஆனால் மக்களுக்கு எது நல்லது என்று சிந்தித்து முடிவுகளை எடுத்துள்ளோம். இது நாட்டின் மாற்றத்தின் அடிப்படைஎன்று கூறி உள்ளார்.

அமித்ஷாவின் பேச்சு மக்களிடையே பேரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.