சென்னை:

ர்நாடக அணைகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க உள்ள தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும்  என்றும் தெரிவித்துள்ள  ஜல்சக்தி அமைச்சகம், இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு நாளை ஒரு லட்சம் கன அடியாக குறையும் என்றும் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பொழிந்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால்,  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.