சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால்,  வீடு, வீடாக சென்று  கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.15,500 சம்பளத்தில் தற்காலிக பணிக்கு ஆள் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு  தேவையான  ஊழியர்கள் சுகாதாரத்துறையில் இல்லாத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக அரசு நோயை கட்டுப்படுத்தும் பணியில் மேலும் பல நூறு பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில்,  நோய் பாதிப்பு மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்களும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் லட்சக்கணக்கானோர் வசித்து வரும் சென்னையில், சில நூறு பேரால் கணக்கெடுப்பது சாத்திய மற்றது.

இதன் காரணமாக,  வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுயஉதவிக்குழுவில் இடம் பெற்றுள்ள பெண்களை ஈடுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,வேலையில்லா பட்டதாரி இளைஞர்களையும் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல தமிழகம் முழுவதும் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலும் வீடு வீடாக சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு ள்ளது. இதற்கு தேவைப்படும் ஊழியர்களை தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தற்காலிக வேலைக்கு சேரும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,500 கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும். இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.