வட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம்

சென்னை :

வட மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

நேற்றைய வெப்பம் 100 செல்சியசை தாண்டியதாக தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக கூறி உள்ளது.

இந்த வெப்பத்தின் தாக்கம்  மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், சென்னை உள்பட  வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும்,  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் தலா 2 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளதகவும் தெரிவித்து உள்ளது.

வெப்பச் சலனமாக காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி