மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கருணை தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர்,  போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு கருணை தொகையை அரசு உயர்த்தி வழங்குமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,  போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு கருணை தொகையை உயர்த்தி வழங்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், கருணை தொடங்கி வழங்குவதில்,  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும்,  தமிழகத்தில் 52,395 வீரர்களின் மனைவிகளுக்கு கருணை தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டு வரும் கருணை தொகை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதம்  ஆக உயர்த்தி தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Increasing the amount of compassion to the families of soldiers: Minister Sellur Raju said in Assembly, மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கருணை தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
-=-