நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம்:

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்ன் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரம் உள்ள மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அணைகள் நிரம்பி உள்ளதால், அங்கிருந்து திறந்துவிடப்படும் நீர்  மேட்டூர் அணைக்கு  வந்துகொண்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சேலம் உள்பட காவிரி கரையோராம் வசித்து வரும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 105 அடியைக் கடந்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Increasing water release from Mettur Dam: Flood warning to Cauvery coastal districts, நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
-=-