கடைசி டி20 போட்டி: இந்தியாவிற்கு 165 ரன்கள் இலக்கு

--

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் 6விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்குன் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

3rd

ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய அணி டி20 போட்டியில் விளையாடி வருகிறது. பிரிஸ்போனில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போகவே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேரிட்டது. கடைசியில் ஸ்டோனிஸ் அணிக்கு கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 164 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றனர்.