காதல் ஜோடியை சேர்த்து வைத்த இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி

சிட்னி:
ந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் காதல் ஜோடி ஒன்று மலர்ந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் மலர்ந்த காதல் ஜோடி பல்லாயிரக்கணக்கான மனங்களை வென்றுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகை ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். வியப்பளிக்கும் வகையில் தனது காதலை வெளிப்படுத்தினார் அந்த ரசிகர்.இதில் உறைந்துபோன அந்த ரசிகை சில வினாடிகள் ஆச்சரியத்தில் மிதந்தார்.
இதன்பிறகு, அவரது காதலை ஏற்றுக்கொண்ட அந்த ரசிகை, அவரைக் கட்டியணைத்து தனது சம்மதத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இருவரும் அன்பு முத்தத்தைப் பரிமாறிக்கொண்டனர்.இதைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி ஊக்கமளித்தார்.மைதானத்தில் இணைந்த காதல் ஜோடியை தொலைக்காட்சிகளில் கண்ட இந்திய ரசிகர்கள், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.