3வது டெஸ்ட் போட்டி: வெற்றிப்பெறும் முனைப்போடு விளையாடி வரும் இந்தியா

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 43 ரன்களை எடுத்துள்ளது.

shikhar-dhawan

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டார்.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஏற்கெனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்விகண்ட இந்தியா இந்த போட்டியில் வெற்றிப்பெறும் முனைப்போடு விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ராகுல் விளையாடி வருகின்றனர். 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 43 ரன்களை எடுத்துள்ளது. ஷிக்கர் தவான் 31 ரன்களையும், லோகேஷ் ராகுல் 10 ரன்களையும் எடுத்துள்ளனர். இதுவரை தவார் 6 பவுண்ட்ரிகளை எடுத்து விளையாடி வருகிறார்.