4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி 3-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய 4வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது.

ind-vs-ing

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியும், 3வது டெஸ்ட் தொடரில் இந்தியாவும் வெற்றிப்பெற்றது. இதனால் மூன்று டெஸ்ட் தொடர் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களும், இந்தியா 273 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். வழக்கம் போல் அணிக்கு விராட் கோலி, ரஹானே அரைசதம் அடித்து கைக்கொடுத்து வெளியேறினர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்களை எளிதில் வீழ்த்தினர்.

தவான், ஷமி, புஜாரா, ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறி அணியின் தோல்விக்கு காரணமாகினர். இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்தியா 184 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என வெற்றிப்பெற்றது.

கார்ட்டூன் கேலரி