Random image

ஆசிய கோப்பை: பாக்கிஸ்தானை 8 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா அபார வெற்றிப்பெற்றது.

pakistan

14வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாக்கிஸ்தான், ஹாங்காங், இலங்கை, ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் தோல்வியை தழுவிய ஹாங்காங் மற்றும் இலங்கை அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், பாக்கிஸ்தானும் மோதின. ஒரு ஆண்டிற்கு பிறகு இரு அணிகள் மோதுவதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவல் கொண்டிருந்தனர். டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஐந்து ஓவர்களிலேயே புவனேஷ் குமார் பந்து வீச்சில் இமாம் – உல்- ஹக்கர் மற்றும் பக்கர் சமான் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்கள் முடிவில் பாக்கிஸ்தன் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்தடுத்து களமிறங்கிய பாக்கிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்களை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து 43.1 ஓவரில் பாக்கிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ரன்களை எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ் குமார் மற்றும் ஜாதவ் தலா 3 விக்கெட்டுக்களையும், பும்ரா 2விக்கெட்டுக்களையும், குல்தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இவற்றை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்ட வீரர்களான ரோஹித் சர்மா பவுண்ட்ரிகளையும், சிக்சர்களையும் விளாசி பாக்கிஸ்தான் பவுலர்களை மிரளச் செய்தார். தவான் தொடர்ந்து நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா 39 பந்துகளுக்கு 52 ரன்களையும், தவான் 54 பந்துகளுக்கு 46 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்தி இணைந்து விளையாடினர். இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதனையடுத்து, இந்தியா 8 விக்கெட்டுக்கள் வித்யாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது.