கோலி சதம் எடுத்தும் பிற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தினால் படுதோல்வி அடைந்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கோலி மிகச்சிறப்பாக சதம் அடித்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியடைந்தது.

west-indies-won-the-match

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. ஆனால், 2வது ஒருநாள் போட்டி வெற்றிதோல்வி இன்றி சமனில் முடிந்தது.

இதையடுத்து இன்று புனேயில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின்னர் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாய் ஹோப் மிக சிறப்பாக பேட்டிங் செய்து 95 ரன்களை குவித்து அசத்தினார். மற்றொரு வீரர் சிம்ரான் ஹெட்மியர் 21 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 37 ரன்கள் விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் 32 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுக்க, கடைசியில் வந்த ஆஸ்லே நர்ஸ் அட்டகாசமாக விளையாடினார். வெறும் 22 பந்துகளை எதிர் கொண்டு 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 283 ரன்களை குவித்தது.

அதன்பிறகு 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோகித் 8 ரன் எடுத்து ஏமாற்றினார். பின்னர் தவான், கோலி சிறப்பாக விளையாடினர். தவான் 35 ரன்னில் அவுட்டாகவே அடுத்து வந்த ராயுடு 22, பண்ட் 24 ரன்களில் வெளியேறினர்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய கோலி 109 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் கோலி சர்வதேச ஒருநாள் 38வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் வந்த வீரர்களான தோனி 7, புவனேஸ்வர் 10, சஹால் 3, கலீல் 3, பும்ரா 0 என வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர். குல்தீப் கடைசி வரை அவுட்டாகாமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

கோலியை தவிர மற்ற வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 47.4 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது.

You may have missed