ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம்….டிடிவி தினகரன்

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கண்டன பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளோம். அமைச்சர்கள், அரசு மீது பேசியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தால் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை சோமாலியாவாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது’’ என்£ர்.