ரியாத்: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார் அந்நாட்டு அரசர் சல்மான்.

சவுதி அரேபியாவிலும் கொரோனா தொற்றுக்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்தைக் (4033) கடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இதுவரை 52 பேர் பலியாகினர்.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தற்போதைய ஊரடங்கு, மறு அறிவிப்பு வரும்வரை காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக சவூதி அரசர் சல்மான் அறிவித்துள்ளார்.