ஆகஸ்டு 15 ஆம் தேதி: ஸ்ரீநகரில் சுதந்திர தின தேசிய கொடி ஏற்றுகிறார் அமித்ஷா!

டில்லி:

ந்தியாவின் சுதந்திர நாளான ஆகஸ்டு 15ந்தேதி ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர். இந்திய தேசியை கொடியை ஏற்றுகிறார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு ஊரடங்கு நீடித்து வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானின் மிரட்டல், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது.

‘தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜீத்தோவல் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.  ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. நேற்று பக்ரீத் பண்டிகைக்காக கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதன் முதலாக ககாஷ்மீர் செல்லும் முதல் மத்திய அமைச்சர் அமித்ஷா அங்கு தேசிய கொடி ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஜம்மு, லடாக் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.