மதுரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு

டில்லி:

துரை தொகுதி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யவேண்டுமென கே கே ரமேஷ் என்ற சுயேச்சை வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மதுரை தொகுதியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 18ந்தேதி அன்று மதுரை சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி வந்ததால், தென் மாவட்ட மக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க கோரி தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதி மன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது என்று மறுத்துவிட தேர்தலும் நடைபெற்று முடிந்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற்ற  இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைக்கும் தேர்தல் அதிகாரி புகுந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும்,  அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்றதாகவும் குற்றம் சாட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு பைசல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கே.கே.ரமேஷ் என்று மதுரை துரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர், மதுரை நாடாளுமன்ற  தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘மதுரை தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றும், அதிமுக 70கோடி ரூபாய்க்கு மேல் அந்த தொகுதியில்  செலவு செய்து உள்ளது.
. அதனால் மதுரைத் தொகுதி தேர்தலை தடை செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.