விஷாலுக்கு எதிர்ப்பு: வரிசையில் வரும்படி சுயேச்சை வேட்பாளர்கள் போர்க்கொடி

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ள நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இரண்டு சக்கர வாகனத்தில் நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், இன்று ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்துள்ளனர்.

இன்று மதியம் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் வரிசையில் நின்றிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் வந்ததும், நேரடியாக வேட்புமனுவை தாக்கல் செய்ய முயற்சித்தார். இதன் காரணமாக வரிசையில் நின்றிருந்த சுயேட்சை வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஷால் வரிசையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், வேட்பு மனு தாக்கலின்போது  விஐபி என்ற பாகுபாடு காட்டாமல் விஷால் மற்றும் தீபா வரிசையில் நின்று மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனார், விஷால் தரப்போ ஏற்கனவே, வரிசை டோக்கன் வாங்கிவிட்டதாகவும், அதன்படியே தற்போது வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய

கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் மாலை  3 மணி வரை மட்டுமே இருப்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இன்று வேட்புமனு தாக்க செய்ய 42 சுயேச்சை வேட்பாளர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.