கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்.. சு.சாமி பகீர் குற்றச்சாட்டு

சென்னை:

கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்து சூட்டைக் கிளப்புவது சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கம்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என்று ஏசினார். இரு நாட்களுக்கு முன், “இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றுவிட்டதா… தமிழ் பொறுக்கிகள் கட்டுமரத்தில் போய் இலங்கையை பிடிக்கட்டும்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.