கேரள முதல்வருக்கு எதிராக கறுப்புகொடி: இந்துமக்கள் கட்சி மனு தள்ளுபடி

சென்னை:

றைந்த திமுக தலைவர் கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் கேரள முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட அனுமதி வழங்க கோரி  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த இந்து மக்கள் கட்சியினர் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வரும் 16ந்தேதி திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி யின் திருவுருவ சிலை அண்ண அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த சிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திறக்க உள்ளார். இந்த சீர்மிகு நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்துகொள்கிறார்.

சபரிமலை விவகாரத்தில், பிடிவாதமாக இருக்கும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்புக்கொடி காட்ட காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை மறுத்துவிட்ட நிலையில், கருப்புக்கொடி போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16-ஆம் தேதி விமான நிலையத்திலும், அண்ணா அறிவாலயம் முன்பும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், காவல்துறையின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பகட்டது. மேலும், இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு காவல் ஆணையர் அனுமதி மறுத்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்து மக்கள் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

இதற்கிடையில்,  சபரிமலை செல்வதற்கு மாற்று மதத்தினருக்கு அனுமதி அளிக்கக்கூடாது. 144 தடை உத்தரவை திரும்பபெற வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பினராயி விஜயன் தமிழகத்திற்கு வருகை தருவதை கண்டித்து திரும்பி போ பினராயி விஜயன் (go back pinaray vijayan ) என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பாக இன்று சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் முன்பு  கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.