இந்தியா: இதய பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 34% உயர்வு

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் இதயத்தை பாதிக்கும் நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 1990ல் இருந்து 2016ம் ஆண்டுவரை இதயத்தை பாதிக்கும் கார்டியோ வாஸ்குலார் நோயின் இறப்பு விகிதம் அமெரிக்காவில் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 115 முதல் 209 பேர் இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டு மரணமடைகின்றனர். இந்த இறப்பு விகிதத்தை இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 15- 20 சதவிகிதத்திலும், அமெரிக்காவில் 6-9 சதவிகிதத்திலும் உள்ளது.
heart
இந்தியாவில் அதிகளவிலான மக்கள் இதயத்தை பாதிக்கும் நோய்களால் இறப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. கார்டியாவாஸ்குலார் நோய் அதிகளவிலானோர் இறப்பதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதுடன், உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைய முறையை பராமரிப்பது, புகையிலை தடை, அதிகளவிலான கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வின் முடிவு கூறுகிறது. இந்தியாவில் உள்ள கிராம, நகரம், மாவட்டம் மற்றும் மாநிலங்களின் உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் படி இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 62.5 மறும் 12.7 மில்லியன் மக்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்கையை இழந்துள்ளனர். இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், “ 30 முதல் 69 வயதினை எட்டியவர்கள் குறிப்பிட முடியாத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று இதய சம்பந்தமான நோய்கள்” என்று கூறியுள்ளது.

இந்த இறப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு காணப்படுகிறது. இதய செயலிழப்பினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக பஞ்சாப் மாநிலமும், குறைந்த அளவில் பாதிப்பிற்க்குள்ளான மாநிலமாக மிசோரமும் உள்ளது. 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் மக்கள் தொகையில் 5681பேர் இருதய பாதிப்பினால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவை காட்டிலும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதுடன், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளையும் ஒப்பிடுகையில் அமெரிக்காவை காட்டிலும் இந்தியா 60 சதவிகிதம் பின் தங்கியுள்ளது.