வரும் 2022 ல் இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்

டில்லி

ரும் 2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை இணைய சேவைகள் தொடங்கும் என தொலைதொடர்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இணைய சேவையில் தற்போது 4 ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் அளிக்கப்படுகிறது.   தெற்காசிய நாடுகளில் பல நாட்டில் தற்போது இதைவிட வேகமான 5ஜி அலைக்கற்றை சேவை அளிக்கப்பட உள்ளன.   இன்னும் இரு வருடங்களுக்குள் ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இத்தகைய 5 ஜி சேவை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இந்த 5 ஜி அலைக்கற்றை மூலம் இணைய வசதி அளிக்கப்படும் போது அதிக வேகமாக இருப்பதால்  மிகக் குறைந்த நேரத்தில் இணயத்தில் தரவிறக்கம் நடக்கும்.   இதனால் மின்சாரம் மற்றும் நேரம் விரயமாவது வெகுவாக குறாஇயும்.    குறிப்பாக  போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு தகவல் பரிமாற்றம் மிக விரைவில் நடைபெறும்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சௌந்தரராஜன், “இந்தியா விரைவில் 5 ஜி சேவைக்கான பணிகளை தொடங்க உள்ளது.   இதற்காக பல பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.  அதனால் வரும் 2022ல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

5 ஜி சேவைக்கான மொபைல்கள் இன்னும் அதிக அளவில் விற்பனையில் இல்லி என்பதால்  இவ்வாறு தாமதம் ஆவதும் இந்தியாவை பொறுத்தவரை நன்மைக்கே என ஹாங்காங்கை சேர்ந்த ஆர்வலரான கிறிஸ்டோபர் லேன் தெரிவித்துள்ளார்.

வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குளிர்கால ஒலிம்பிக் தொடரை ஒட்டி தென் கொரியா 5ஜி சேவைய தொடங்க உள்ளது.   அதைத் தொடர்ந்து 2019 இறுதியில் ஜப்பானும், சீனாவில் 2020 லும் 5 ஜி சேவை தொடங்க உள்ளது.   அதன் பிறகு  இந்த நாடுகளில் மலிவு விலையில் 5 ஜி மொபைல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.