டில்லி,

துப்பாக்கி முனையில் திருமணம் செய்யப்பட்டு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய பெண் உஸ்மா நேற்று நாடு திரும்பினார்.

நேற்று மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்த உஸ்மா, பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

டில்லியைச் சேர்ந்த 20 வயதான உஸ்மா, மலேசியாவில் இருந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த தாகிர் அலியை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து உஸ்மா, கடந்த 1–ந் தேதி பாகிஸ்தான் சென்றார்.

அவரை கைபர்–பக்துன்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்துக்கு அழைத்துச்சென்ற தாஹிர் அலி, அங்கு வைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை திருமணம் கொண்டார். அதையடுத்து அவரது பாஸ்போர்ட் உள்பட அனைத்து ஆவணங்களையும் தாஹிர் அலி பறித்துக்கொண்டார்.

மேலும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை என்னிடமிருந்து மறைத்து விட்டார்.

அதையடுத்து,  தாஹிரிடம் இருந்து தன்னை விடுவிக்குமாறு இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

விசாணையை தொடர்ந்து தொடர்ந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாகிர் அலியிடமிருந்த பயண ஆவணங்களை விடுவித்து உஸ்மாவை வாஹா எல்லை வழியாக இந்தியா செல்ல அனுமதித்தது.

அதையடுத்து நேற்று இந்தியா வந்தடைந்தார் உஸ்மா. மத்திய அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து நன்றி கூறினார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாகிஸ்தானுக்கு திருமணமாகிச் செல்லும் பெண்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றனர்.  ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுக்கு மேற்பட்ட மனைவிகள் கண்டிப்பாக இருக்கின்றனர் என்கிறார்.

இன்னும் சில நாட்கள் நான் அங்கே இருக்க நேரிட்டிருந்தால் என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது என்றும்,  என்னைப்போல மேலும் பல அப்பாவிப் பெண்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும்,

மலேசிய, பிலிப்பைன் நாட்டு இளம்பெண்கள் ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி அங்கே அழைத்து வரப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்.

என்னைக் காப்பாற்றிய இந்திய அரசுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும்,  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எனது வாழ்வில் ஒளியேற்றினார், எனக்கு நம்பிக்கை தந்து, வாழவேண்டும் என்ற உறுதியையும் அளித்தார் என்று நன்றியுடன் குறிப்பிட்டார்.

 

உஸ்மா நலதுமுடன் நாடு திரும்பியதற்க உதவியதற்காக உஸ்மாவின் குடும்பத்தினர்  மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.