டி20 உலகக்கோப்பை: முதல் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதல்!

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை, இந்திய அணி எதிர்கொள்கிறது.

தென் அமெரிக்காவின் கயானாவில் 6வது மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. குரூப் ’ஏ’வில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன.

Indian

குரூப் ‘பி’யில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் வகையில், டி20 போட்டிகளில் இந்திய மகளிர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அணியை டி20ல் திறமையாக வழிநடத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை இதுவரை வென்றதில்லை. கடந்த 2009 மற்றும் 2010ல் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை டி20 தொடர்களில் இந்திய அணி அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்றுள்ள 5 உலகக்கோப்பை டி20 தொடர்களில் 3 முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.