சோப்பூர்

காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வர வேண்டும் என இந்த்யராணுவம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த தகவல் கிடைத்ததால் இந்திய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அத்துடன் வெள்ளிக்கிழமை அன்று சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த மன்சூர் என்பவன் சுட்டுக் கொல்ல்பட்டான்.

இதே மாவட்டத்தில் மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தவிர மாநிலத்தில் ஊடுருவ முயன்ற நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 7 பாகிஸ்தானியர்கள் இந்திய பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் உடலை பாகிஸ்தானுக்குஎடுத்த்ச் செல்ல இந்தியா அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் தற்போது பதட்ட நிலை நிலவி வருவதால் இந்த உடல்களை எடுத்துச் செல்ல வரும் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக் கொடி ஏந்தி வர வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. வெள்ளிக் கொடி ஏந்தி வருபவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தக் கூடாது என்பதும் அவ்வாறு கொடி ஏந்தி வருபவர்கள் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதும் போர் விதிகளில் முக்கியமான ஒன்றாகும்.