இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனுக்கு உதவி

பெய்ஜிங்:

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் முடிவு செய்துள்ளனர். உதவி தேவைப்படும் 3வது நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்பட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக வுஹான் மாநாட்டிற்கு முன்பே இந்திய அதிகாரிகளின் ஆப்கன் விவகாரதம் குறித்து சீன அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.