டில்லி

டுத்த மாதம் முதன் முறையாக இந்தியாவும் நேபாளமும் இணந்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கான புலி இந்தியா, நேப்பாளம் வங்கதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, மலேசிய மியான்மர் ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சில நாடுகளில் உள்ளது.  இதில் இந்தியாவும், நேபாளமும் அருகருகில் உள்ளது. இரு நாடுகளின் புலிகளின் சரணாலயங்களும் ஒட்டி உள்ளன.  இதனால் இரு நாடுகளும் இணைந்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளன.

இதற்காக காடுகளில் புலிகள் நடமாடும் இடம் என கண்டறியப்பட்ட இடங்களில் மறைமுக காமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.  இதைக் கொண்டு புலிகளின் நடமாட்டத்தை கண்டறிவதுடன் அவைகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளனர்.  இதன் மூலம் ஒரே விலங்கு இரு நாட்டின் கணக்கிலும் தனித்தனியே கணக்கெடுக்கப்பட மாட்டாது.

இதற்கு முன்பு 2010ல் நேபாளத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 200 வயது வந்த புலிகள் இமயமலைப் பகுதியில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் பிறகு கணக்கெடுக்கப்படவில்லை.  மொத்தம் 13 நாடுகளில் புலிகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.  மொத்தப் புலிகளின் எண்ணிக்கை சுமார் 3900 இருக்கலாம் என கூறப்படுகிறது.  2010ல் ரஷ்யா நாட்டில் புலிகள் பற்றிய கருத்தரங்கில் வரும் 2022க்குள் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டது.

உலக வனவிலங்குகள் கழகம் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் முன்பு இருந்ததில் தற்போது 93% மட்டுமே இருப்பதாகவும் கூறி உள்ளது.  மனிதனுக்கும் மிருகங்களுக்கும் ஏற்படும் போராட்டங்கள், சீதோஷ்ண மாறுதல்கள் மற்றும் சட்டவிரோத வனவிலங்குகள் வேட்டை, சட்ட விரோத வனவிலங்குகள் விற்பனை ஆகியவைகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த கழகம் தெரிவித்துள்ளது.