பாகிஸ்தானுக்கு கூட்டு எச்சரிக்கை விடுத்த இந்தியாவும் ரஷ்யாவும்

டில்லி

ல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கர வாதத்தை பொறுத்த வரையில் பாகிஸ்தான் இரு வகை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக உலக நாடுகள் கூறி வருகின்றன.    பாகிஸ்தான் தனக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் கெட்டவர்கள் எனவும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை நல்லவர்கள் எனவும் கூறி வருகிறது.   இந்தியாவுக்கு எதிராக பயங்கர வாதிகளை பாகிஸ்தான் தூண்டி வருவதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தற்போது டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரத்மர் மோடி இன்று ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.    சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அந்த அறிக்கையில், “இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.   ஒரு சில நாடுகள் பயங்கர வாதம் குறித்த தங்கள் இரட்டை நிலைப்பட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சர்வதேச பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களை அளிப்பது மிகவும் தவறான செயலாகும்.    இது போன்ற பயங்கர வாத அச்சுறுத்தலுக்கு  எதிராக அந்த நாடுகள் இருக்க வேண்டும்.  இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.