வாஷிங்டன்

மெரிக்காவில் தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனத்தை இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ஐ விலக்கி அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.  அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.   இது தொடர்பாகப் போராட்டங்கள் எழலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   தொலைத் தொடர்பு மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுப் பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டு மக்கள் மீது கொடுமைகள் அரங்கேறுவதாக ஐநா உள்ளிட்ட பல அமைப்புக்களில் புகார் எழுப்பியது.   பல அமைப்புக்கள் இந்த புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.   ஆயினும் மலேசியா உள்ளிட்ட ஒரு சில இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.   அமெரிக்க அரசு இது குறித்து எவ்வித முடிவும் தெரிவிக்காமல் உள்ளது.   இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக நாட்டின் நற்பெயரை உயர்த்தும் நடவடிக்கைகளில் இந்தியத் தூதரகம் இறங்கி உள்ளது.   அதன் ஒரு பகுதியாக இந்த பணிக்காக அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிறுவனம் இந்திய அரசுக்குக் கொள்கை கலந்தாய்வு, சரியான திட்டமிடல், மற்றும் அரசு தொடர்பு உதவி ஆகியவற்றை இந்திய அரசுக்கு அளித்து அமெரிக்க அரசு, நாடாளுமன்ற அவைகள், அமெரிக்க மாநில அரசுகள் உள்ளிட்டவைகளிடம் இந்தியாவின் நற்பெயரை உயர்த்த  உதவ உள்ளது.  இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒப்பந்தம் இடப்பட்டு மாதம் $40000 என ஊதியம் வழங்கப்பட உள்ளது   டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 29 வரை பணி புரிய இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் பரப்புரை நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தி உள்ளது.  கடந்த 2008 ஆம் வருடம் இந்திய அமெரிக்க நு ஒப்பந்தத்தின் போது ஹாலே பார்பர் நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டது.