“க்ளென்மார்க்” நிறுவனம் COVID-19-க்கு சிகிச்சையாக, “ஃபாவிபிராவிர்” என்னும் மாத்திரையை, ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில், ஒரு மாத்திரை ரூ .103/- என்னும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில் அறிமுகமாகியுள்ள ஃபாவிபிராவிர், வாய்வழி எடுத்தக் கொள்ளும், COVID-19 சிகிச்சைக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் முதல் மருந்து என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசானது முதல் மிதமானது வரையிலான பாதிப்பு கொண்ட COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக க்ளென்மார்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்து “ஃபாவிபிராவிரை” மருத்துவ நிபுணர்கள், வைரஸைக் கொல்லும் ஒரு மாய அம்பு போன்று பார்ப்பதை விஞ்ஞானிகள் எச்சரித்தனர். அதைப்பற்றி அவர்கள் கூறும்போது, இந்த மருந்து வாய்வழி எடுத்துக் கொள்ளும் மாத்திரை வடிவில் இருப்பதால் சற்றே பலனளிக்கலாம். ஆனால், இம்மருந்தின் உண்மையான செயல்திறனை இனிமேல் தான் காண வேண்டும் என்று கூறினார்.

லேசான முதல் மிதமானது வரை பாதிப்புள்ள COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு மாத்திரைக்கு ரூ.103/- விலையில் “ஃபேபிஃப்ளூ” என்ற பிராண்ட் பெயரில் வைரஸ் எதிர்ப்பு மருந்து ஃபாவிபிராவிரை அறிமுகப்படுத்தியுள்ளதாக க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் தெரிவித்துள்ளது.

COVID-19 சிகிச்சைக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதல் முதல் வாய்வழி மருந்து “ஃபேபிஃப்ளூ”  என்னும் “ஃபாவிபிராவிர்” என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த மருந்து ஏற்கனவே ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அவர்கள் கோவிட் -19 சிகிச்சைக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர். சீனாவும் இதைப் பயன்படுத்துகிறது. கடந்த மே மாதம் ரஷ்யாவில் அனுமதி அளிக்கப்பட்டது,” என்று ஷாலிமார் பாக், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க கோளாறுகள் துறை இயக்குனர் டாக்டர் விகாஸ் மவுயா கூறினார்.

COVID-19 சிகிச்சையில் ஃபாவிபிராவிர் குறிப்பிடத்தக்க அளவில் பலனளிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதனால்தான் இது இப்போது இந்தியாவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மவுரியா கூறுகையில், “கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இம்மருந்து ஒரு நிவாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

“இது ஒரு மந்திர அம்பு போன்றதல்ல, ஏனெனில் நாம் கொடுக்க வேண்டியது இது ஒன்று மட்டுமே அல்ல.  மேலும், இது COVID-19 க்காக தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மருந்தும் அல்ல, ஆனால், இது பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் இனிமேல் தான் பார்க்க வேண்டும். பெரிய அளவில் பயன்படுத்தத் தொடங்கும்போது, இதன் உண்மையான செயல்திறன் கண்டறியப்படும், ” என்று அவர் பி.டி.ஐ க்கு தெரிவித்தார்.

“சிறந்த விஷயம் என்னவென்றால், ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்தப்படும் “ரெம்டிசிவிர்”  போன்று இல்லாமல், இது ஒரு வாய்வழி மருந்து. எனவே, இதை வீட்டில் இருந்தும் பயன்படுத்தலாம். இதனால் இதன் நன்மைகள் மேலும் கூடுகிறது,” என்று டாக்டர் மவுரியா கூறினார். பிரபலமான  நகரத்தைச் சார்ந்த நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த்குமார், ரெம்டிசீவர் அல்லது ஃபாவிபிராவிர் போன்ற இந்த வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் தற்போதைய கொரோனாவின் போக்கை மாற்றக் கூடிய அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தான் நம்பவில்லை என்றார். “கேம் சேஞ்சர்” என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமானால், அதை “டெக்ஸாமெதாசோனு”க்கு கூறலாம். ஏனெனில், அது இறப்பு விகிதத்தில் கணிசமான குறைப்பதாகக் காட்டியுள்ளது மற்றும் மலிவாக கிடைக்கிறது, ” என்று அவர் கூறினார்.

“ஏற்கனவே ஏராளமான மருந்துகள் இருந்தாலும், மேலும் சில நோயாளிகளுக்கு ஃபாவிபிராவிர் உதவும்,” என்றும் சர் கங்கா ராம் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் குமார் கூறினார். ஃபாவிபிராவிர் மருந்து 200 மி.கி மாத்திரையாக 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டைக்கு அதிகபட்சமாக ரூ. 3,500/- சில்லறை விலையில் கிடைக்கும் என்று க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் தெரிவித்துள்ளது. முதல் நாளில், ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் 1,800/முதல் நாள் மில்லி கிராமும், இரண்டாம் நாளில் இருந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை என மொத்தமாக 800 மில்லி/நாள் கிராமும், 14  நாட்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகளை இமாச்சல பிரதேசத்தில் உள்ள பெட்டி (Beddy) என்னும் உற்பத்தியகத்தில் இருந்து இந்நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மருந்து மருத்துவமனைகள் மற்றும் சில்லறை விற்பனை மருந்தகங்களிலும் கிடைக்கும் என்று க்ளென்மார்க் நிறுவனம் கூறியுள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம் வெள்ளிக்கிழமை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (டி.சி.ஜி.ஐ) இருந்து, உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஒப்புதலைப் பெற்றது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரித்து வரும் நிலையில், நமது சுகாதார அமைப்புகளுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது,” என்று க்ளென்மார்க் மருந்துகள் தலைவரும் எம்.டி. க்ளென் சல்தான்ஹா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஃபேபிஃப்ளூ போன்ற பயனுள்ள சிகிச்சையின் கிடைக்கும் நன்மை இந்த அழுத்தத்தை சரிசெய்ய கணிசமாக உதவும் என்றும், இந்தியாவில் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க மிகவும் தேவையான ஒன்றை வழங்குவதாகவும் நிறுவனம் நம்புகிறது. அரசு ஒப்புதலில், தடைசெய்யப்பட்ட பயன்பாடு என்பது பொறுப்பான மருந்தின் உபயோகத்தைக் குறிக்கிறது. இதன்படி, ஒவ்வொரு நோயாளியும் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்னர், மருந்து மற்றும் சிகிச்சையைப் பற்றிய தகவலறிந்த ஒப்புதலில் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என க்ளென்மார்க் கூறினார்.

லேசான மற்றும் மிதமான பாதிப்புகளுடன்/அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நீரிழிவு நோய், இதய நோய் இருந்தாலும், இம்மருந்தை பயன்படுத்தலாம் என க்ளென்மார்க் கூறியுள்ளது. இது நான்கு நாட்களுக்குள் வைரஸ் அளவை விரைவாகக் குறைக்கிறது. மேலும், விரைவான அறிகுறி மற்றும் கதிரியக்க சோதனையில் முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

ஃபாவிபிராவிர் மருந்து, லேசான மற்றும் மிதமான COVID-19 நோயாளிகளில், 88 சதவீதம் வரை பலனளித்துள்ளது. COVID-19 இன் அவசர மற்றும் அதிகத் தேவையை முன்னிட்டு, விரைவான கண்காணிப்பு ஒப்புதல் செயல்முறையின் கீழ் டி.சி.ஜி.ஐ உள்நாட்டு நிறுவனமான க்ளென்மார்க் நிறுவனத்திற்கு ஃபாவிபிராவிர் (200 மி.கி) மாத்திரையைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி அளித்தது. இந்தியாவில் COVID-19 நோயாளிகளுக்கு ஃபாவிபிராவிர் மீது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கிய முதல் நிறுவனம் க்ளென்மார்க் ஃபார்மா ஆகும். முதன் நன்செய்தி வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி!!!

தமிழில்: லயா