டில்லி

ர்தார்பூர் பாதையில் செல்ல இந்தியர்களுக்கு விதிக்கப்பட உள்ள 20$ கட்டணத்தை நீக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவில் சீக்கியர்களின் தலைவரான குரு நானக் நினைவிடம் அமைந்துள்ளது.   இதைக் காண சீக்கியர்கள் ஏராளமானோர் வருவது வழக்கமாகும்.   எனவே இந்த குருத்வாராவுக்கும்  இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் தேரா பாபா நானக் ஆலயத்துக்கும் இடையே பாதை ஒன்று அமைக்கப்பட்டது.

விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பாதையில் பயணம் செய்ய இந்தியச் சீக்கியர்கள் விசா பெற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் இந்த பாதையை பராமரிக்கும் செலவுகளுக்காக ஒவ்வொரு இந்திய யாத்திரிகர்களிடம் இருந்து $20 (ரூ.1420) கட்டணம் வசூலிக்கப் பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது.

இந்த பாதை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளன.  இதில் இந்த சேவைக் கட்டண ரத்து தவிர மற்றவற்றுக்குப் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.  இந்தியா தரப்பில் இந்த சேவை கட்டணத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.