ராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது: சீனா அத்துமீறலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

டெல்லி: ராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது என்று சீனாவின் இந்தியாவிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக எல்லை பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர் கதையாகி வருகிறது. இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், எல்லை பகுதியில் இந்திய ராணுவம் தான், முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாக, சீன தூதரகம் குற்றம் சாட்டி வருகிறது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்ததை அடிப்படையில், இரு நாடுகளின் ராணுவமும், எல்லையில் ஏற்கனவே எந்தெந்த நிலையில் இருந்தனரோ, அதையே பின்பற்ற வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

ஆனால், இந்த உடன்பாட்டை சீனா மீறி உள்ளது. ஆகையால் பாங்காக் ஏரியின் தென் பகுதியில், கடந்த, 29, 30ம் தேதிகளில், சீன ராணுவம் அத்துமீறியது. எல்லை நிலைமை, பேச்சுவார்த்தைக்கு முரணான நடவடிக்கை என சீன ராணுவம் அத்துமீறியது.

அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் தான் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். ராணுவம் மற்றும் துாதரக ரீதியாக சீன அதிகாரிகளுடன் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நிகழும் போது, இந்த அத்துமீறல் குறித்தும் முறையிடுவோம் என்று கூறினார்.