P.J. Francis   அவர்களின் முகநூல் பதிவு:
இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய இந்திய வீராங்கனை  ஓபி ஜெய்ஷா. அவர் இந்த ஒலிம்பிக் போட்டியில்,  42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள்.
ஆனால் இப்போது ஏன்  இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்து மற்றும் . தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து  உடலுக்கு அளிக்காவிட்டால் கிராம்ப் என்ற தசைப்பிடிப்பு ஏற்படும். அது மட்டுமல்ல.. அதீத நீரிழப்பால் மரணமும் கூட சம்பவிக்கும்.
அதுவும் பிரேசில் போன்ற நீ  வெப்பமான இடங்களில் இது விரைவாக நடக்கும். இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள்  செய்திருப்பார்கள்.
ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்ககும்.
தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவை உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள். இது அடிப்படை.
ஒலிம்பிக்கிலும் இப்படி இருந்தது. அதாவது மற்ற நாட்டினர் இப்படியோர் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். இந்தியா சார்பில் இந்த அடிப்படை வசதியைக்கூட செய்யவில்லை.
 
live-india-athletics-7591
.வேறு அணியினர் தரும் எதையும் வாங்கவோ அருந்தவோ கூடாது என்பது விதி.
இதே போல எட்டு கிலோமீட்டருக்கு ஒரு  முறை இப்படிப்பட்ட வசதியை ஒலிம்பிக் நிர்வாகம் செய்திருக்கும். அங்கு எந்த நாட்டு வீராங்கனையும் நீர் அருந்தலாம்.
இந்தியா எந்த ஏற்பாடும் செய்யப்படாததால், இந்த எட்டு கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் இருக்கும் இடத்தில் மட்டும் நீர் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஜெய்ஷாவும் அவருடன் ஓடிய கவிதாவும்.
நீரின்றி கடும் வேகத்தில் ஓடும்போது, இது தற்கொலைக்கு சமம்.
இறந்து விடுவோமோ என்ற அச்சத்துடன்தான் ஓடி இருக்கிறார் ஜெய்ஷா.
முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்தவர் மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு எழுந்திருக்கிறார். அப்போதும் இந்திய மருத்துவக் குழு அருகில் இல்லை. ரியோ மருத்துவக் குழுவினர்தான் அவரைக் கவனித்திருக்கிறார்கள்.
இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும் லட்சணம்
(தகவல் நன்றி: என்.டி.டி.வி.)