மும்பை: 
ல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது பற்றிய  அறிவிப்பினை  தொடர்ந்து  இன்று  மதியம்  பங்கு  வர்த்தகத்தில்  சென்செக்ஸ்  மதிப்பு  573  புள்ளிகள் அளவில்சரிவை சந்தித்திருக்கிறது.
sensex-decline
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் பயங்கர வாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவல் இந்திய அரசுக்குக் கிடைத்தது. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை கடந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்த இந்திய விமானங்கள், அங்கு தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் பலியானார்கள். இந்தத் தகவலை இந்திய ராணுவம் வெளியிட்டதும், பங்கு வர்த்தகத்தின் அனைத்து விற்பனை நிலைகளிலும் சரிவு ஏற்பட்டது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பு மதியத்தில் 572.89 புள்ளிகள் (2.02 சதவீதம்) என்ற அளவில் சரிந்து 27,719.92புள்ளிகளாக உள்ளன.  ரியல் எஸ்டேட், சுகாதாரநலம், மின்சாரம் மற்றும் உலோகம் என்ற வரிசையில் அனைத்து துறைகளிலும்சென்செக்ஸ் மதிப்பு 5.05 சதவீதம் அளவிற்கு சரிவினை சந்தித்தன.
இதேபோல, தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 186.90 புள்ளிகள் (2.13 சதவீதம் )அளவிற்கு சரிந்து 8,558.25  புள்ளி களாக உள்ளன.
சென்செக்சில் முன்னிலை வகிக்கும் 30 நிறுவனங்களான அதானி போர்ட்ஸ், ஐ.சி.சி.ஐ. வங்கி,  ஆக்சிஸ் வங்கி,  லூபின், டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், கெயில், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., டாக்டர் ரெட்டீஸ்,  லார்சன்  மற்றும்  டூப்ரோ  மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை 4.75 சதவீதம் அளவிற்கு வர்த்தகத்தில்  சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.