லண்டன்: கிரிக்கெட் ஸ்டம்புகளின் மீது வைக்கப்படும் சிறிய பெய்ல் கட்டைகள் தொடர்பான பிரச்சினையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியுள்ளனர்.

ஸ்டம்புகளின் மீது படும் பந்து, பெயில் கட்டைகளை கீழே விழச்செய்தால்தான் அது அவுட் என்று கருதப்படும். ஆனால், இத்தகைய விதிமுறை இந்த உலகக்கோப்பையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், பும்ரா வீசிய பந்தில், பெயில் கீழே விழாததால் டேவிட் வார்னர் தப்பிப் பிழைத்தார். இதுதவிர, ஆஸ்திரேலியா – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஆட்டம், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம், இலங்கை -நியூசிலாந்து இடையிலான ஆட்டம் ஆகியவற்றிலும் இந்த பெயில் பிரச்சினை எழுந்தது.

பெயில் கீழே விழாமல் மறுவாய்ப்பு பெறும் வீரர், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடலாம். இந்த நிலை போட்டியின் ஆற்றலை பாதிக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் ஐசிசி ஒரு முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.