இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது: ஜெயிக்கப்போவது யாரு?

ந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி 20 தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  ஆனால். டி20 போட்டிகளில் தாங்களே பலம் வாய்ந்த அணியாக இருக்கிறோம் என்று ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.  முக்கியமாக அந்த அணியின் முக்கிய வீரர்களான வார்னர், ஸ்மித் இல்லாதது அந்த அணிக்கு இழப்பே.

சமீபத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் மோதிய ஆஸ்திரேலியா அணி உள்ளூரில் நடைபெற்ற ஒரு நாள் தொடர் மற்றும் டி20 ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியைப்  பொறுத்தவரை பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், கிறிஸ் லீன், ஆர்சி ஷார்ட், ஆகியோரே முக்கியமானவர்கள்.  ஐசிசி தரவரிசையில் ஆரோன் பின்ச் பேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.  முன்பு போல ஆஸி அணியின் பந்துவீச்சு தற்போது சிறப்பாக இல்லை என்றாலும் நைல், டை, ஸாம்பா ஆகியோர் ஓரளவுக்கு விளையாடக்கூடியவர்கள்.

ஆனால் இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்  இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  கோலி, ரோகித், ராகுல் பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது, சஹால், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் போன்றவர்கள் நல்ல பார்மில் உள்ளனர்.

ஆஸி அணியுடனான போட்டி என்றாலே வார்த்தை மோதல் நடப்பது வழக்கமாகிவிட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி எங்களை சீண்டினாலும் அதற்கேற்ற பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய அணி வம்புச் சண்டைகளை இழுக்கும் அணி அல்ல. நம்முடைய சுயமரியாதைக்கு என்று ஒரு அளவுகோல் உண்டு.  . அந்த எல்லையை யாராவது தாண்டினால், நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என்றார்.

இதேபோல ஆஸி கேப்டன் அரோன் ஃபின்ச் செய்தியாளர்களை சந்தித்தபோது “ டி20 போட்டிகளில் நாங்களே சிறந்த அணி. ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடர்களிலும் நன்றாக விளையாடி வென்றோம். ஆகவே நாங்கள் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம்” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India – Australia cricket match starts today: Who will win?, இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது: ஜெயிக்கப்போவது யாரு?
-=-