இந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்!

கான்பெரா: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 தொடர், கான்பெராவில் நாளை(டிசம்பர் 4) தொடங்குகிறது.

இந்திய நேரப்படி, பிற்பகல் 1.40 மணிக்கு போட்டித் தொடங்குகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெறும்.

இந்திய அணி, ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் 1-2 என்ற கணக்கில் இழந்துவிட்டதால், டி-20 தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், டி-20 தொடரை வென்றால்தான், அதற்கடுத்து நடைபெறும் மிக முக்கியமான டெஸ்ட் தொடரை கூடுதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஒருநாள் போட்டியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், இந்திய அணி, டி-20 போட்டியில் தனது முடிவுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டி, நாளை துவங்கும் நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளும், டிசம்பர் 6 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறுகின்றன.