கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது & கடைசி ஒருநாள் போட்டியை, 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்தாலும், இது இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. விராத் கோலி, பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் பின்ச் 75 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 59 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர். 38 ரன்கள் அடித்த அலெக்ஸ் கேரி, கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசி கட்டத்தில் மிரட்டிவந்த ஆஷ்டன் அகர் 28 ரன்களில் நடராஜனால் அவுட் செய்யப்பட்டார்.

கடைசி ஓவரில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே. அந்த ஓவரை பும்ரா வீச, 49.3 ஓவர்களிலேயே 10வது விக்கெட்டையும் இழந்து 13 ஓவர்களில் தோற்றது ஆஸ்திரேலியா.

இந்தியா சார்பில், ஷர்துல் தாகுருக்கு 3 விக்கெட்டுகளும், பும்ரா & நடராஜனுக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன. ஜடேஜா & குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்களைக் கூடுதலாக வழங்கினர் இந்திய பவுலர்கள் என்பது கவனிக்கத்தக்கது.