Random image

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 37 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வெற்றிப்பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் 2-1 என்றா கணக்கில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது.

acheiment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிட்யில் ஆஸ்திரேலியாவை வென்று அசத்தியது. அதன்பிறகு நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்களை குவித்து போட்டியை டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து பாலோ ஆன் ஆன இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

இதில் விராட், விஹாரி உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் அளிக்க இந்திய அணி 2வது இன்னிங்சில் 106 ரன்களை மட்டுமே எடுத்து 399 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது.

india

இந்நிலையில் 5வது நாளான இன்று மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி ஆரம்பித்த 27வது பந்தில் இந்தியா 2விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் இந்தியா 137 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்துள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் 76ரன்களையும், புஜாரா 106 ரன்களையும், கோலில் 82 ரன்களையும், ரோஹித் சர்மா 63 ரன்களையும் எடுத்து எடுத்து அசத்தினர். இந்த போட்டியில் ஒரே இன்னிங்சில் 6 விக்கெடுகளை கைப்பற்றி பும்ரா சாதனை படைத்துள்ளார். அதேபோல் 3வது இன்னிங்சில் 3விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார். இதன் மூலம் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பும்ரா பெற்றார்.

இதற்கு முன்னதாக கடந்த 1981ம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த மைதானத்தில் நடந்த போட்டிகள் அனைத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்த இந்தியா 37 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்று வரலாற்றில் மீண்டும் இடம்பெற்றுள்ளது.