வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பையை 7வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 7வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

14வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் துபாயில் நடைபெற்றது. இதில் இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது. லீக் சுற்றுகளில் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் தோல்வியடைந்து வெளியேற, சூப்பர் 4 சுற்றிற்கு பிற அணிகள் முன்னேறின. தொடர்ந்து சூப்பர் 4சுற்றில் வெற்றியை பதித்த இந்தியா முதலில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

India

இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. பாக்கிஸ்தான் அணியை 37 ரன்களில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையிஹ்ல், இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங்கைஅ தேர்வு செய்தது.

முதல் பத்து ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி வங்கதேச அணி 62 ரன்களை எடுத்திருந்தது. இதில் லிடன் தாஸ் அரை சதம் கடந்தார். தொடர்ந்து லிடன் தாஸ் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 20.5வது ஓவரில் கேதர் ஜாதவ் வீசிய பந்தை எதிர்கொண்ட மொஹாதி ஹசன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த விக்கெட் 23.5 வது ஓவரில் விழுந்தது. சகால் பந்து வீச்சில் காயிஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். 40வது ஓவர் வரை அசராமல் விளையாடிய லிடன் தாஸ் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் 117 பந்துகளுக்கு 121 ரன்களை எடுத்து அசத்தினார்.

இதையடுத்து 48.3 ஓவரில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

வெற்றிப்பெறும் முனைப்போது களமிறங்கிய ரோஹித் சர்மா மெர்சலான தொடக்கத்தை அளித்தார். 4.4 ஓவரிலேயே தொடக்க ஆட்டவீரரான தவான் நஜ்முல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு விளையாடிய ராயுடு மொர்த்தஷா பந்து வீச்சில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய தோனி 36 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தஃபிஜர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு புவனேஷ்வர் குமார் மற்றும் ஜடேஜா இணை சேர்ந்தனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். கடைசில் 20 ரன்களில் ஜடேஜா மற்றும் புவனேஷ்குமார் ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ் மிக கவனமாக விளையாடினர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி ஆசிய கோப்பையில் வெற்றிப்பெற்று சாதனை புரிந்துள்ளது.

இந்நிலையில் 14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 7வது முறையாக வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-