வான்கூவர்,

பெண்களுக்கான  ஹாக்கி வேர்ல்டு லீக் ரவுண்டு சுற்றின் 2வது லீக் போட்டியில், இந்திய அணி பெலாரசை வீழ்த்தி அரையிறுதிக்கு  முன்னேறியது.

கனடாவில் உள்ள மேற்கு வான்கூவர் நகரில் பெண்களுக்கான  ஹாக்கி வேர்ல்டு லீக் ரவுண்டு சுற்று நடைபெற்று வருகிறது.

இந்த லீக் சுற்று போட்டியில்  இந்தியா, உருகுவே, பெலாரஸ், சிலி, கனடா, மெக்சிகோ, டிரினிடாட்  உள்ப்ட  7 அணிகள்  இரண்டு பிரிவுகளாக பங்கேற்கின்றன.

ஏ  பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் உருகுவே அணியை வீழ்த்தியது.

இரண்டாவது போட்டியில் இந்தியா, பெலாரஸ் அணிகள் மோதின. இரு அணியினரும் விறுவிறுப்பாகவும், துடிப்பாகவும் ஆடினர்.

முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளுக்கு பெனால்டி கார்னர்   வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை இரு  அணிகளும் தவறவிட்டனர்.

அதைத்தொடர்ந்து  22வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால், இந்த வாய்பையும் இரு அணிகளும் தவறவிட்டது.

தொடர்ந்து ஆட்டத்தில் மீண்டும் விறுவிறுப்பு கூடியது. அதையடுத்து  26வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை வந்தனா  பீல்டு கோல் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து கடுமையாக  போராடிய பெலாரஸ் அணி 58வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்பை கோலாக மாற்ற முயற்சித்தனர். ஆனால்  இந்தியஅணியின்கோல்கீப்பர் சவிதா, சாமர்த்தியமாக தடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.