நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது.

india

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிப்பெற்ற இந்திய தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து நான்காவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தியது. இறுதியாக இரு அணிகளும் பங்குபெறும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களிலும், ஷிகர் தவான் 6ரன்களிலும், கில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் வந்த அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணை சேர்ந்த தோனி ஒரு ரன் எடுத்த நிலையில் போல்ட் அவுட்டாகினார். இதையடுத்து ராயுடு உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன் சேர்ந்தார்.

விஜய் சங்கர் 45ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 90 ரன்கள் எடுத்து சதம் அடிப்பதற்கு எதிர்பார்த்த இருந்த ராயுடு மேதிவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர் அடித்து 45 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 49.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரர்களான காலின் 24 ரன்களிலும், ஹென்றி நிகோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் வந்த கேப்டன் வில்லியம்ஸன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் டாம் இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டாம் 37 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த பிற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் சாஹல் 3விக்கெட்டுகளைய், ஷமி மற்றும் பாண்டியா தலா 2விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 44 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த பொட்டியில் 35 ரன்கள் வித்யாத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றதுடன் தொடரையும் 4-1 என கைப்பற்றியது.