முதல் ஒருநாள் போட்டி: 8விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

--

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார்.

india

ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் முடிந்த நிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். கேப்டன் வில்லியம்ஸை தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம் அரைசதம் கடந்து 64 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3விக்கெட்டுகளையும், சாஹல் 2விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் 10 ஓவர்கள் கடந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு 49 ஓவரில் 156ரன்கள் எடுக்க வேண்டுமென்பது இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்தியாவின் தொடக்க ஆட்ட வீரர் ரோஹித் சர்மா 11ரன்களில் ஆட்ட்மிழ்க்க அடுத்ததாக ஷிகர் தவானுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் அரைசதம் கடந்த நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் 132 ரன்களை எட்டியது. அதன்பிறகு 45ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இதையடுத்து தவானுடன் அம்பத்தி ராயுடு இணை சேர்ந்தர். இந்நிலையில் இந்திய அணி 34.5 ஓவரில் 2விக்கெட் இழந்து 156ரன்களை எடுத்தது. இறுதியாக இந்திய அணி அணி 8விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என் இந்திய முன்னிலையில் உள்ளது.

6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா உடனான வெற்றியை தொடர்ந்து நியூசிலாந்து அணியையும் இந்தியா வெற்றிப்பெற்றதல் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.

You may have missed