சர்வதேச கிரிக்கெட் முதல் டி 20 : இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ராஞ்சி

ஸ்திரேலியாவுடனான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் டி 20 பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் தனது டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெளியாடி வருவது தெரிந்ததே.   நேற்று ராஞ்சியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான் முதல் டி 20 போட்டி நடந்தது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.   ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆட்டத்தை துவங்கினர்.  வார்னர் 8 ரன்களும் பிஞ்ச் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  பின்பு மேக்ஸ்வெல் (17), ஹெட் (9), ஹென்ரிக்ஸ் (8), கிறிஸ்டியன்(9), பெய்னி(17), கோல்டர் நைல்(1) ஆகிய ரன்களில்  அவுட் ஆனார்கள்.  டை(0) மற்றும் ஜம்பா(4) ரன்களிலும் இருந்தனர்.  மொத்தம் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மழையின் காரணமாக போட்டி நீண்ட நேரம் பாதிப்புக்குள்ளானது.

இதன் பின்பு டக்வொர்த் லூயி முறைப்படி இந்தியா 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தாக வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    இந்திய அணியினர் அபாரமாக விளையாடி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தனர்  இதை தொடர்ந்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதாக அறிவிக்கப்பட்டது.