இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்திய இந்தியா

மொகாலி

ன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியப் பயணம் மேற்கொண்டுல்ள இலங்கைக் கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.    இதில் தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.   இன்று இரண்டாவாது போட்டி மொகாலியில் நடைபெற்றது.

டாஸில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.   முதலில் பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடியது.   அணித்தலைவர் ரோகித் சர்மா இரட்டை சதம் ஆடித்தார்.   இன்று ரோகித் சர்மாவின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.  மொத்தம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன் எடுத்திருந்தது.  ரோகித் 208 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை பறி கொடுத்தது.  ஏஞ்சலா மாத்யூஸ் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.    இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.   இந்தியா இன்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் 1-1 என்னும் கணக்கில் இரு அணிகளும் உள்ளன.    வரும் 17 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடை பெற உள்ளது.   அதில் வெல்லும் அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்படும்